எல்லாம் ஈ அடிச்சான் காப்பி., பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2க்கு வந்த புதிய சோதனை! கலாய் வாங்கிய விஜய் டிவி!!

0
எல்லாம் ஈ அடிச்சான் காப்பி., பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2க்கு வந்த புதிய சோதனை! கலாய் வாங்கிய விஜய் டிவி!!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியலின் மெகா சங்கமம் குறித்த, எபிசோடுகள் மூக்குத்தி அம்மன் படத்தின் கிளைமாக்ஸ் போன்று இருப்பதாக நெட்டிசன்கள்  கலாய்த்து வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்:

விஜய் டிவியில் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்களின்  மெகா சங்கமம் எபிசோடுகள்  கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ஐ கூட்ட வேண்டும் என்பதற்காக, அதிரடி திருப்பங்கள் இந்த தொடர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், போலி சாமியார் மக்களிடம் கோயில் கட்டுவதாக ஏமாற்றி பணம் வசூலிக்கிறார்.

மேலும், அந்தப் பணத்தை திருட வேண்டும் என்ற பிளானை தனது சீடர்களுடன் ரகசியமாக பேசும் போது சந்தியா, அதை வீடியோ எடுத்து மக்கள் கூடியிருக்கும் இடத்தில் ஒளிபரப்பு செய்து அவருடைய முகத்திரையை கிழிக்கிறார். மேலும், தீவிரவாதி செல்வத்திடம் இருந்து பார்வதியை போலீஸ் உதவியுடன் போராடி உயிருடன் மீட்டு வருகிறார்.

இந்த காட்சிகள் இதற்கு முன், நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் கிளைமாக்ஸ் சீன்களை அப்படியே ஒத்து இருப்பதாக  கமெண்ட் எழுந்துள்ளது. வழக்கமாக, மெகா சங்கமம் சீரியலில் இது போன்ற சினிமாவில் காட்சிகளை காப்பியடிக்கும் விஜய் டிவி இந்த முறை, நயன்தாரா படத்தை காப்பி அடித்துள்ளதாக  பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here