விஜய் டிவியில் புதிதாக உருவாகும் மற்றொரு நிகழ்ச்சி – அதுவும் ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களா??

0

விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியாக தேறி பேபி என்ற புதிய நிகழ்ச்சியை களமிறக்கியுள்ளது.

தேறி பேபி

விஜய் டிவியில் தற்போது பல புதிய அத்தியாயங்களை அறிமுகப்படுத்தி கொண்டே உள்ளனர். சீரியலில் இருந்து பல நிகழ்ச்சிகள் புதிதாக தொடங்கப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா கலக்கல் ராணி என பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் சீரியல்களும் புதிதாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு, காமெடிக்கு என தனித்தனியாக நிகழ்ச்சிகளை ஆரம்பித்த விஜய் டிவி மீண்டும் சிறுவர்களுக்கு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது தேறி பேபி என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

தலைகீழாக தம்கட்டி அமர்ந்த ரம்யா பாண்டியன் – இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா?? அசந்து போன ரசிகர்கள்!!

அதற்கான ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளனர்.

இதில் மௌனராகம் சீரியல் பிரபலமான பேபி கிருத்திகா, ஸ்ருதி, பாரதி கண்ணம்மா சீரியல் ஹேமா, லட்சுமி போன்றோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. வெண்பாவும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here