நீயா நானா ஷோவிலிருந்து வெளிநடப்பு செஞ்ச கோபிநாத்.., அப்படி என்னதான் பேசுனாங்க!!!

0
நீயா நானா ஷோவிலிருந்து வெளிநடப்பு செஞ்ச கோபிநாத்.., அப்படி என்னதான் பேசுனாங்க!!!
நீயா நானா ஷோவிலிருந்து வெளிநடப்பு செஞ்ச கோபிநாத்.., அப்படி என்னதான் பேசுனாங்க!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா ஷோ மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் கோபிநாத். இவர் நிகழ்ச்சியை அழகாக கொண்டு செல்லும் விதம் தான் நீயா நானா ஷோ ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம். மேலும் இவர் பேச்சாளர், பட்டப்படிப்பில் ஆசிரியர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து வருகிறார் .

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இந்த வாரம், கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள் – அந்த பெண்களின் கணவர்கள் எனும் தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது, கல்யாணத்திற்கு பிறகு பெண்கள் ஏன் தாயின் பேச்சை கேட்டு, உங்க கணவர்கள் போடுற Dress ல இருந்து இப்படி தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறீர்கள் என்று காரசாரமாக விவாதம் நடந்தது. அதற்கு பெண்கள் அம்மா எங்க மேல இருக்கிற பாசத்துல தான் அப்படி சொல்கிறார்கள் என்று பதில் அளித்தனர்.

25 வருடம் போராட்டம்.., இப்ப தான் அண்ணனுக்கு கை கூடிருக்கு.., மாரி செல்வராஜ் எமோஷனல் speech!!

இதனை தொடர்ந்து நம்ம கோபிநாத், அந்த பெண்களை பார்த்து அப்ப உங்க மாமியார் ஏதாவது சொன்னால் மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்குறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதுக்கு அந்த பெண்கள் மீண்டும் தாய் பாசத்தால் தான் சொல்கிறார்கள் என்று ஆரம்பிக்க கோபி ஆள விடுங்கடா சாமி, நன் ரிடைர் ஆகுறேன் என்று விளையாட்டுக்கு கூறி சென்றதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here