அவங்க போன் நம்பர் வாங்கி கொடுங்க – தனுஷ் கிட்ட ஓப்பனா கேட்ட விஜய் டிவி டிடி! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
அவங்க போன் நம்பர் வாங்கி கொடுங்க - தனுஷ் கிட்ட ஓப்பனா கேட்ட விஜய் டிவி டிடி! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

நடிகர் தனுஷ், நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்தின், பிரீமியர் நிகழ்வில் கலந்து கொண்ட  தனுஷ் குறித்த  போட்டோவை போட்டு, பரபரப்பு கேள்வி ஒன்றை விஜய் டிவி டிடி எழுப்பி உள்ளார்.

 நம்பர் கிடைக்குமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படம், விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல இவர் ஹாலிவுட்டில் நடித்திருக்கும் தி கிரே மேன் படம் ஜூலை 22ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இதன் பிரீமியர் காட்சி, அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பங்கேற்ற நடிகர் தனுஷிடம் பல கேள்விகள்  கேட்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, நடிகர் தனுஷ் குறித்த முக்கிய பதிவு ஒன்றை போட்டோவுடன் வெளியிட்டுள்ளார். அதாவது, அமெரிக்காவுல மாஸ் பண்றீங்க, உங்களுக்கு ஒரு சீட் தள்ளி இருக்கிற ஹாலிவுட் ஹீரோ ப்ரிட்ஜெர்டன் வாட்ஸப் நம்பர் கிடைக்குமா? என அவரிடம் கேட்டுள்ளார். ஏற்கனவே, இவர்கள் கிளோஸாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி, இதனால் டிடி க்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆனதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்று.
இதை சுட்டிக்காட்டி டிடி-யின் இந்த பதிவால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள், ஏம்மா உனக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா? எங்க அண்ணாவை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஏற்கனவே ஷாருக்கான் கூட போட்டோ போட்டுட்ட, இப்போ ப்ரிட்ஜெர்டன் கூடயும் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடனும், அதுக்குத்தானே நம்பர் என கலாய்த்துள்ளனர். மேலும் அவரிடம் நம்பரை கொடுக்காதீங்க என தனுசுக்கு காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here