குக் வித் கோமாளி சீசன் 4 ஷூட்டிங் ஸ்டார்ட்., நிகழ்ச்சி லான்ச் தேதியுடன் வெளியான சீக்ரெட் அப்டேட்!!

0
குக் வித் கோமாளி சீசன் 4 ஷூட்டிங் ஸ்டார்ட்., நிகழ்ச்சி லான்ச் தேதியுடன் வெளியான சீக்ரெட் அப்டேட்!!
குக் வித் கோமாளி சீசன் 4 ஷூட்டிங் ஸ்டார்ட்., நிகழ்ச்சி லான்ச் தேதியுடன் வெளியான சீக்ரெட் அப்டேட்!!

விஜய் டிவியின் நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 ன் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்:

விஜய் டிவி நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்கள் இதுவரை முடிந்துள்ளது. சமீபத்தில் அதன் 4ம் சீசனுக்கான ப்ரோமோ வெளியானது. இதுவரை இல்லாத வகையில், ஜி பி முத்து, ரவீனா உள்ளிட்ட பல புதிய கோமாளிகள் இந்த சீசனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் ஷூட்டிங் நேற்று தொடங்கியதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல், வருகிற ஜனவரி 28ஆம் தேதி இந்த நிகழ்ச்சியின் First லான்ச் எபிசோடு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 8 கோமாளிகள் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே அப்டேட் வெளியாகியிருந்த நிலையில், இந்த சீசனின் குக்குகள் யார்? என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here