குக் வித் கோமாளி 3 இல் கலந்துகொள்ளும் பாரதி கண்ணம்மா ரோஷினி, மனோபாலா – அதிகாரபூர்வ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு தேதியை விஜய் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 குக் வித் கோமாளி சீசன் 3:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில், மக்கள் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் 2 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இதன் மூன்றாவது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிகழ்ச்சி பற்றியும் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பற்றியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் அண்மையில் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ  வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி வருகிற, ஜனவரி 22ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா ரோஷினி, காமெடி நடிகர் மனோ பாலா, பாடகி கிரேஸ் உள்ளிட்ட பிரபலங்கள் களமிறங்கியுள்ளனர். இது போக, புது கோமாளிகளாக சூப்பர் சிங்கர் பரத் மற்றும் முக்குத்தி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here