விஜய் டிவிக்கு Bye சொன்ன குக் வித் கோமாளி புகழ்.. வருத்தத்தில் ரசிகர்கள்!!

0

சின்னத்திரை ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி புகழை தெரியாமல் இருக்கமுடியாது. அந்த அளவிற்கு தன் நகைச்சுவை பேச்சால் மக்களின் மனதை கவர்ந்தவர் இவர். ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு இவரது கடின உழைப்பே காரணம்.

திரையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு சென்னைக்கு வந்த புகழ் விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இவருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் பெண் வேடங்களில் காமெடி செய்து விஜய் டிவி ஷோக்களில் தோன்றினார்.

அப்போது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான்  குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சியில் தங்கை ஷிவாங்கி மீது இவர் காட்டும் பாசமும், சீசன் 1 இல் ரம்யா பாண்டியன் சீசன் 2 இல் பவித்ரா உடன் இவர் செய்யும் காதல் சேட்டைகள் மக்களை கவர்ந்தது. தற்போது சமூக வலைதளத்தில் புகழ் தான் ட்ரெண்டிங்.

இந்நிலையில் இவர் விஜய் டிவியில் கலந்து கொண்ட ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற நிகழ்ச்சியில் இருந்து விலக உள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்ட புகழ், உங்களின் ஆதரவில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. விரைவில் பட ஷூட்டிங் முடிந்ததும் மீண்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here