பிக் பாஸ் இறுதி போட்டிக்கு ஆரியை அழைக்காததற்கான காரணம் – விஜய் டிவி பதில்!!

0

விஜய் டிவியில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 இன் பைனல் நிகழ்ச்சிக்கு ஆரியை அழைக்காததற்கு காரணம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆரி:

தமிழ் சினிமாவில்,2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடும் கூத்து என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஆரி. மேலும் நெடுஞ்சாலை, மாயா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவியில் நேற்று நடந்த பிக் பாஸ் சீசன் 5 பைனல் நிகழ்ச்சிக்கு தன்னை யாரும் அழைக்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பட்டமாக தெரிவித்து உள்ளார் ஆரி. இது பற்றி விஜய் டிவி தரப்பில் விசாரிக்கும் போது தற்போது இருக்கும் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடு காரணமாக பிரபலங்கள் மற்றும் பழைய பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரையும் அழைக்கவில்லை. இதனாலேயே ஆரியையும் அழைக்கவில்லை என்று விஜய் டிவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here