விஜய் டிவியின் பிரமாண்ட ஷோவான பிக் பாஸ் சீசன் 5 நேற்று முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட்:
சின்ன திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து விட்டது. இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் சீசன் 5 இன் Finale நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ராஜூ ஜெயமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவதாக பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிகழ்ச்சியில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கூடிய விரைவில் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் இதன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைச்ச இடத்துல தான தேட முடியும்..
தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்..
This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம #disneyplushotstar இல் மட்டுமே! ? #BBUltimate pic.twitter.com/FIs7O3GUky— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 17, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்