ஷிவின் கிட்ட இப்படி நடந்துபீங்கன்னு எதிர்ப்பார்க்கல தனம்.,நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!!

0
ஷிவின் கிட்ட இப்படி நடந்துபீங்கன்னு எதிர்ப்பார்க்கல தனம்.,நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!!

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6ல் தனம் மற்றும் ஷிவின் இடைய உச்சகட்ட மோதல் ஏற்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.

வைரல் ப்ரோமோ :

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், 5 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று நடந்த எலிமினேஷன் டாஸ்க்கில் நிவாஷினி, குறைவான வாக்குகளை பெற்று மக்களால் வெளியேற்றப்பட்டார். அவரின் எலிமினேஷனைத் தொடர்ந்து இன்றைய வாரம், தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியுடன் விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே, இந்த வாரத்துக்கான டீம் பிரிக்கும் பிரச்சனையில் தனம் மற்றும் மைனா நந்தனி இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டது. தனத்தை சமாதானப்படுத்த வந்த ரக்ஷிதாவை அவர் கேவலமாக பேசி விடுகிறார். இதனைத் தொடர்ந்து மைனா வந்து, தனத்திடம் என்ன பிரச்சனை உனக்கு என கேட்கிறார். ஏற்கனவே டீம் பிரித்து விட்டு, சும்மா உப்புக்கு சப்பா அந்த இடத்துல வச்சு, பிக்ஸ் பண்றீங்க, என தனம் சண்டை போடுகிறார்.

டிஎன்ஏ ரிப்போர்ட்டை மாற்றும் வெண்பா? பகடை காயாகும் ஹேமா! பரபரப்பில் பாரதி கண்ணம்மா!!

அப்போது குறிப்பிட்ட ஷிவின், குக்கிங் டீம்மில் இருந்த 2 பேர் இருப்பதால், இப்போ என்ன நடந்து விடப்போகிறது. ஏன் இப்படி பண்ற என கேட்கிறார். இதற்கு தனம், உன் கருத்தை எல்லாம் வந்து என் முன்னாடி சொல்லாத, என்கூட நீ எதுக்கு வந்து பேசுற என முகத்தில் அறைந்தார் போல் சொல்கிறார். இதனால் ஷிவின் தேங்க்யூ தனம் என சொல்லிவிட்டு கோபமாக எழுந்து போய் விடுகிறார். இது குறித்த காட்சிகள் 2ம் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here