இதுவரை நம்ம பார்க்காத லுக்கில் பிக்பாஸ் ஷிவானி – போட்டோவுடன் அவரே  வெளியிட்ட வாழ்த்து பதிவு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 புதிய லுக்கில் ஷிவானி :

விஜய் தொலைக்காட்சியில், புகழ் பெற்ற தொடராக ஒளிபரப்பாகி வந்த “சரவணன் மீனாட்சி” என்ற சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சின்னத் திரை உலகில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து  மக்கள் மத்தியில் பேசப்பட்டார். இதையடுத்து, ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா மற்றும் கடைக்குட்டி சிங்கம்  என பல சீரியல்களில் நடித்து படிப்படியாக உயர்ந்தார்.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் களமிறங்கி புகழின் உச்சத்தை தொட்டார். தற்போது, உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் “விக்ரம்” படத்தில்  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். இந்த நிலையில் தற்போது, இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய போட்டோவை பகிர்ந்துள்ளார். புதிய லுக்கில், போட்டோவை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here