வருகிறது பிக் பாஸ் சீசன் 5… கண்டுக்காமல் சென்ற கமல்… விழிபிதுங்கி நிற்கும் விஜய் டிவி!!!

0

விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியாகும் குறிப்பட்ட பிரபலங்களின் 100 நாள் வாழ்க்கையை காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் பிரதானம். இதை வைத்து விஜய் டிவியும் நன்றாக தனது TRPயை ஏற்றி கொண்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன்-கான வேலைகளில் விஜய் டிவி ஈடுபட்டு  வருகிறது. இது பற்றி கமல் எதுவும் அலட்டிக் கொள்ளாமல்  இருப்பதால் விஜய் டிவி விழிபிதுங்கி நிற்கிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைத்தது போல நடத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது விஜய் டிவி. போன வருடம்  குறித்த தேதியில் நிகழ்ச்சி நடத்த முடியாமலும், முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கடைசி நேரத்தில்  விலக, கிடைத்த பிரபலங்களை எல்லாம் வைத்து  பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியோ நடத்தி விட்டனர். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் இல்லாமல்  பிக் பாஸ் சீசன் 5  தொடங்குவதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.

இருப்பினும் தொடக்கத்திலேயே விஜய் டிவிக்கு  ஒரு சிக்கலை எதிர்கொண்டு உள்ளது. கொரோனா மூன்றாம் அலைக்கு முன்னால் இந்த சீசன் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்ற சூழ்நிலைக்கு  விஜய் டிவி தள்ளப்பட்டு உள்ளது. மேலும்  இந்த சீசனையும் கமல் அவர்கள் தான்  தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான அட்வான்ஸ் தொகையையும் அவர் ஏற்கனவே பெற்று விட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கின் போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னை ஒரு பக்கம், கமலின்  புதிய படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் என விஜய் டிவி இரு முனை சிக்கலில் உள்ள நிலையில் இது எதையுமே கருத்தில் கொள்ளாமல் எனக்கு என்ன என்ற ரீதியில் கமல் இருப்பது விஜய் டிவி மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  பிக்பாஸ் படப்பிடிப்பு எப்போது  தொடங்கினாலும் கமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என கமலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது விஜய் டிவி.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here