விஜய் டிவி டாப் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் ரஜினி பட நடிகை – சூடு பிடிக்கும் அடுத்த கட்ட காட்சிகள்!!

0
விஜய் டிவி டாப் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் ரஜினி பட நடிகை - சூடு பிடிக்கும் அடுத்த கட்ட காட்சிகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், வெண்பாவுக்கு அம்மாவாக ஷர்மிளா கதாபாத்திரத்தில்  பிரபல நடிகை ரேகா ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 ரேகா என்ட்ரி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  சீரியல்களில் ஒன்று  பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில், தற்போது எதிர்பார்த்த அளவு  ரீச் இல்லை என்பதால், இந்த தொடர் எப்போது முடிவுக்கு வரும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சீரியல் தற்போது பல கட்ட திருப்பங்களுடன்  தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும், ஹேமா பாரதியிடம் சொல்லுகிறார். இதனால் பாரதி அதிர்ச்சியில் உறைகிறார். மேலும், வெண்பா செய்த சூழ்ச்சி சௌந்தர்யாவுக்கு தெரிந்து  விட்டதால், அவர் வெண்பாவை கன்னத்தில் அறைந்து கண்டிக்கிறார்.

இந்த நிலையில், வெண்பா அம்மாவாக ஷர்மிளா பாத்திரத்தில் நடித்து வந்தவர், அமெரிக்கா செல்வது போன்று காட்டப்பட்டது. தற்போது நடிகை ரேகா மீண்டும், இந்த சீரியலில் ஷர்மிளாவாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இனி, இந்த சீரியல் அடுத்தகட்ட முக்கிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ரேகா ரஜினியுடன் பல படங்களில் ஹீரோயினமாக நடித்து, வெள்ளித்திரையில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here