எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் சென்ற பாரதி கண்ணம்மா பிரபலங்கள் – விஜய் டிவி வழங்கிய முக்கிய அங்கீகாரம்!!

0

விஜய் டிவியின் விருது வழங்கும் நிகழ்வில், பாரதிகண்ணம்மா தொடரை சேர்ந்த இரு பிரபலங்கள் இந்த ஆண்டுக்கான, சிறந்த அறிமுக பிரபலத்திற்கான விருதை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

விருது வழங்கி கவுரவம்:

விஜய் தொலைக்காட்சியின், பிரபலங்களின் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், வருடம்தோறும் நடிகர்களுக்கு விஜய் அவார்ட்ஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது. இன்னும் டிவியில் ஒளிபரப்பாகவில்லை.

யாருக்கு எந்த விருது வழங்கப்பட்டது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இப்பொழுது புதிய செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாரதிகண்ணம்மா தொடரில் வருண் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராஜுவுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த Find Of The Year என்ற விருது கிடைத்துள்ளது. இவர், பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல், பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா பாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா தேவிக்கும் இந்த ஆண்டிற்கான Find Of The Year விருது கொடுக்கப்பட்டுள்ளது. அறிமுகமாகி கொஞ்ச நாட்களிலேயே, இவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டதை அடுத்து, பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here