கோபிக்கு ஆதரவான ராம மூர்த்தி.,மிரண்டு போன பாக்யா – உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி சீரியல்!!

0
கோபிக்கு ஆதரவான ராம மூர்த்தி.,மிரண்டு போன பாக்யா - உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி சீரியல்!!
கோபிக்கு ஆதரவான ராம மூர்த்தி.,மிரண்டு போன பாக்யா - உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி சீரியல்!!

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி இனியாவை தன்னுடன் அழைத்து வந்து விடணும் என்று ரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த விஷயம் இன்று நிறைவேறியுள்ளது.

இனியா வருகை:

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி வீட்டிற்குள் வந்து, எதுக்கு இனியாவ அடிச்சீங்க? என்று சத்தம் போடுகிறார். இதனால் கோபி மற்றும் குடும்பத்தினர் இடையே சண்டை முற்ற, ஈஸ்வரி குடும்பம், குழந்தைகள் வேண்டாம் என்று நீதான் வேற கல்யாணம் பண்ணிட்டு போய்டீலா அப்புறம் என்ன? இனியா மேல அக்கறை உனக்கு என்று கேட்க, நான் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லவில்லையே என்று கோபி கூறுகிறார். அதற்கு எழில் உங்கள மாதிரி ஒரு அப்பா எங்களுக்கு தேவையில்லை வீட்டை விட்டு வெளிய போங்க என்று சொல்ல, எனக்கு உங்க ரெண்டு பேர பத்தி கவலை இல்லை, ஆனா இனியா என் செல்ல குழந்தை அவமேல எனக்கு அக்கறை, பாசம் இருக்கு என்று சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போ கூட இனியா என்னோட வந்தா, நான் அவளை கையோட கூட்டிட்டு போயிருவேன் என்று கோபி சொல்ல, அனைவரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர். இதையடுத்து பாக்கியா, அதை இனியா சொல்லட்டும் நீ சொல்லு என்று கேட்க, இனியா ஸ்கூலில் அப்பா தனக்கு ஆதரவாக பேசியது, வீட்டில் பாக்கியா அறைந்தது அனைத்தையும் யோசிச்சு பார்க்க, இனியா நான் அப்பா கூட போறேன் என்று அவர் கையை பிடித்து விட்டார். இதையடுத்து கோபி, இனியாவை அழைத்து கொண்டு வெளியில் செல்ல, குடும்பத்தினர் அனைவரும் தடுக்கின்றனர். இருப்பினும் இனியா வரவில்லை, கோபியுடன் ராதிகா வீட்டுக்கு சென்று விட்டார்.

மறுபுறம் கோபி, இனியாவை அழைத்து வந்ததை பார்த்த ராதிகா, மயூ ஷாக் ஆகிவிட்டனர். இதையடுத்து ராதிகாவிடம், கோபி இனி இனியா இங்க தான் இருக்க போறா?, நீ அவளை பத்திரமா பாத்துக்கோ என்று சொல்ல அவரும் ஓகே சொல்கிறார். அடுத்து இனியாவின் தோளில் ராதிகா கை வைத்து உட்காரு என சொல்ல கையை தட்டி விடுகிறார் இனியா. பிறகு கோபி இனியாவுக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வா ராதிகா என்று சொல்ல அவர் கிச்சனுக்கு போய் விட்டர். இதையடுத்து கோபி, இனியா மற்றும் மயூவை உட்கார வைத்து சந்தோசமாக பேசுகிறார்.

அது மட்டும் இல்லாமல் என் பேத்தி இனியா இருக்கும் இடம்தான், இனி என் வீடு என ராமமூர்த்தி, ராதிகா வீட்டுக்கு சென்று விடுகிறார். அவரைப் பார்த்ததும், கோபி டென்ஷனாகி நீங்க போங்க, இனிய வரமாட்டா? என சொல்கிறார். நான் போறதுக்காக வரல, என் பேத்தி கூட இங்கேயே இருக்க போறேன் என, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஷாக் கொடுக்கிறார். இது குறித்த காட்சிகள் இனி வரும் எபிசோட்களில் காட்டப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here