கோபியை உதறி தள்ளும் ராதிகா, அமிர்தாவிற்கு ஷாக் கொடுத்த வர்ஷினி ,, அடுத்த கட்டத்தில் பாக்கியலட்சுமி!!

0
கோபியை உதறி தள்ளும் ராதிகா, அமிர்தாவிற்கு ஷாக் கொடுத்த வர்ஷினி ,, அடுத்த கட்டத்தில் பாக்கியலட்சுமி!!

கடந்த சில வாரங்களாக கோபி-ராதிகா திருமணம் கோணத்தில் நகர்ந்து வந்த பாக்கியலட்சுமி சீரியல், தற்போது அமிர்தா எழில் திருமணம் நோக்கி மெல்ல நகர தொடங்கியிருக்கிறது.

பாக்கியலட்சுமி

இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில், மயூ இனியா தன்னை தள்ளி விட்டது குறித்து கோபியிடம் கூற, அதற்கு அவர் இனியா அப்படி செய்யமாட்டாளே என கோபி சொல்கிறார். இதை கேட்டு கோபமடைந்த ராதிகா அப்போ மயூ பொய் சொல்றாளா? என கத்துகிறார், உங்கள நான் கல்யாணம் பண்ணதுல இருந்து உங்க குடும்பத்துல உள்ளவங்க எங்க ரெண்டு பேரையும் டார்ச்சர் பண்றாங்க என சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மறுபுறம் இனியா, ஜெனி அக்கா குழந்தை என்ன எப்படி கூப்பிடும் என்று கேட்க, அதற்கு பாக்கியா அத்தை என்று கூப்பிடும் என்று சொல்கிறார். நோ நோ அப்படி கூப்பிட கூடாது என்ன அக்கானு தான் கூப்பிடனும் என்று இனியா சொல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து குழந்தைக்கு தாலாட்டு பாடுவது குறித்து செல்வியும் ஈஸ்வரியும் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த சமயம் பாக்கியா தன் மாமனார், மாமியாருக்கு மருந்து வாங்கி வருகிறார், அப்போது என்ன பாக்கியா நான் தான் மருந்து செலவுக்கு பணம் தரேன்னு சொன்னன்ல என்று ஈஸ்வரி கேட்க பரவாயில்லை அத்தை என்கிட்ட பணம் இருக்கு என்று பாக்கியா சொல்கிறார். மேலும் பாக்கியாவை நினைத்து ராமமூர்த்தி, ஈஸ்வரி பெருமை படுகின்றனர். அப்போது ஈஸ்வரி வர்ஷினி வந்து போன விஷயத்தை எழிலிடம் சொல்ல, அவர் அதை கேட்டு ஷாக் ஆகி விட்டார்.

ரொம்ப டார்ச்சர் பண்றாங்க., காண்டான நடிகர் சிம்பு – ஓ.,எல்லாத்துக்கும் இதுதான் காரணமா?

இந்த பக்கம் வர்ஷினி, அமிர்தா வீட்டிற்கு வருகிறார். அப்போது அவரை அமிர்தா அம்மா அப்பாவிடம் இன்ட்ரோ கொடுக்க அவர்கள், பேசிக்கொண்டிருக்கும் போது எழில் எங்களை அம்மா அப்பா என்று தான் கூப்பிடுவார் என்று சொல்கின்றனர். இதை கேட்ட வர்ஷினி, அப்போ நீங்க எனக்கு அத்தை, மாமா என்று சொல்ல, அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது வர்ஷினி, நான் எழிலை கல்யாணம் பண்ணிக்க போறேன், அவுங்க வீட்ல எல்லாருக்கும் என்ன புடிச்சிருக்கு ,அப்பா கிட்டயும் பேசி சம்மதம் வாங்கிட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். வர்ஷினி சொன்ன எதையும் அமிர்தா நம்பவில்லை. இருப்பினும் அமிர்தா அம்மா, அப்பா இதனால் கவலை அடைந்து, அமிர்தா என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட கேட்காமல் உள்ளே சென்று விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here