ராதிகா தான் இப்டின்னா அவங்க பொண்ணு அதுக்கு மேல.,, கோபிக்கு ஷாக் கொடுத்த மயூ.,, லேட்டஸ்ட் எபிசோட்!!

0
ராதிகா தான் இப்டின்னா அவங்க பொண்ணு அதுக்கு மேல.,, கோபிக்கு ஷாக் கொடுத்த மயூ.,, லேட்டஸ்ட் எபிசோட்!!

பாக்கியலட்சுமி சீரியலில், இன்று கோபிக்கு ராதிகாவால் ஒரு புதிய சோதனை வந்துள்ளது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

இன்றைய எபிசோடில், பாக்கியா குடும்பத்தினர் அனைவருக்கும் விதவிதமாக சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது செழியன் மற்றும் எழில், அப்பா போனதுக்கு அப்புறம் அம்மா நிறைய டிஷ் செய்றாங்க என கிண்டல் அடிக்க, ஈஸ்வரி பேசாம சாப்பிடுங்க என அதட்டுகிறார். அப்போது பாக்கியா நான் அவருக்கு 40,000 ரூபாய் அனுப்பிட்டேன் அத்தை என சொல்ல , ஈஸ்வரி எதுக்கு அனுப்புன அவன் வேற கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா போயிட்டான் அவனுக்கு எதுக்கு இந்த பணத்தை அனுப்பனும், உனக்குத்தான் நஷ்டம் என கத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மறுபுறம் ராதிகா கோபிக்கு நூடுல்ஸ் செய்து கொடுக்க, அதை பிடிக்காமல் சாப்பிடுகிறார். மேலும் சிக்கன், மட்டன், மீன் இந்த மாதிரி சமைக்க மாட்டியா? என கோபி ராதிகாவை கேட்க, எனக்கு ரொம்ப நேரம் கிட்சன்ல நின்னு சமைக்க பிடிக்காது என சொல்கிறார். அப்போ நாளைல இருந்து நீங்க சமைங்க, ஹோட்டல சாப்பிட்டு சாப்பிட்டு வீட்டு சாப்பாடு டேஸ்டே தெரியல என ராதிகா சொல்கிறார்.

இதையடுத்து எழில், அமிர்தா வீட்டிற்கு போனதை பற்றி பாக்கியவிடம் கூற, இப்போ உங்க கல்யாண விஷயத்தை பத்தி நம்ம வீட்ல பேச முடியாது கொஞ்சம் பொறுமையா இருங்க, நீ அமிர்தாவுக்கு நம்பிக்கை கொடு என்று சொல்கிறார். மறுபக்கம் கோபி ஆளுக்கு முன்னாடியே போய் கட்டிலில் படுத்துக் கொண்டார், அப்போது ராதிகா, மயூ வர என்ன சீக்கிரம் தூங்க வந்துடீங்க என்று கேட்க, அதற்கு கோபி லேட்டா வந்த கட்டிலில் நீங்க தான் இடம் தர மாட்டீகிறீங்களே, அதான் சீக்கிரம் வந்துட்டேன் என சொல்கிறார். மேலும் மயூ உங்களுக்கும், மம்மிக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்போ ஏன் நான் உங்களை அங்கிள்னு கூப்பிடனும் அப்பானு கூப்பிடவா என கேட்க கோபி மற்றும் ராதிகா ஷாக் ஆகிவிட்டனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here