ராதிகாவின் உச்சகட்ட கோபம்… தாங்க முடியாமல் கோபி செய்த காரியம்.,,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

0
ராதிகாவின் உச்சகட்ட கோபம்... தாங்க முடியாமல் கோபி செய்த காரியம்.,,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்த பிறகு சாப்பாட்டுக்கே கஷ்டம் படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ரேஷன் கார்டு கேட்டு கோபி பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அவர் வந்ததும் ராமமூர்த்தி, ஈஸ்வரி ஆகியோர் எதுக்கு வந்த உனக்கு வெக்கமா இல்லையா? என திட்டுகின்றனர். அப்போது கோபி, பாக்கியாவை போய் ரேஷன் கார்டை எடுத்து வா என அதிகாரம் செய்ய, நான் ஒன்னு உங்க பொண்டாட்டி இல்ல நீங்க இப்படி எனக்கு ஆர்டர் போட என பாக்கியா கோபிக்கு பதில் கொடுக்கிறார். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் ரேஷன் கார்டு எல்லாம் கொடுக்க முடியாது என கோபியை துரத்தி விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கோபி ராதிகாவிடம் போய் நடந்ததை சொல்ல, அவர் பயங்கர டென்ஷன் ஆகி கத்துகிறார். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு ஹோப் கொடுத்தது எல்லாம் பொய் என்று சத்தம் போடுகிறார். இதையடுத்து கோபி இந்த தாலி உன் கழுத்துல ஏறுனது நீ ரொம்ப மாறிட்ட என ராதிகாவிடம் சொல்கிறார். மேலும் ராதிகாவின் கோபம் தாங்காமல் கோபி மறுபடியும் ரேஷன் கார்டு வாங்க பாக்கியா வீட்டுக்கு போகிறார். கிச்சன் முழுக்க கார்டை தேடுகிறார், இதையடுத்து செழியன், எழிலிடம் ரேஷன் கார்டு எங்க என கேட்க, ஜெனி கபோர்டுல இருக்கு என்று சொல்ல அதைத் தேடி எடுக்கிறார் கோபி.

இதையடுத்து என் பெயரை நீக்கிட்டு ரேஷன் கார்ட ரிட்டர்ன் செய்கிறேன் என சொல்லிவிட்டு கோபி கிளம்புகிறார். மேலும் ரேஷன் கார்டை ராதிகாவிடம் போய் கொடுக்க அவர் கோபம் குறைந்து கூல் ஆகிவிட்டார். மறுபுறம் ஈஸ்வரி, வர்ஷினி வீட்டுக்கு வந்தது குறித்து எழிலிடம் கூறுகிறார். அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா, எழிலுக்கு கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும் என சொல்ல எழில் இதைக்கேட்டு ஷாக் ஆகி விட்டார். எழிலுக்கு நல்லா கிராண்டா கல்யாணம் பண்ணனும் யாரையாவது லவ் பண்றேன் அப்டி இப்டினு சொன்ன அவ்வளவுதான் என சொல்லிவிட்டு சென்று விட்டார் ஈஸ்வரி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here