கணவரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பாக்கியலட்சுமி பிரபலம் – குடும்பத்துடன் இணைந்து கோலாகலம்!!

0
கணவரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பாக்கியலட்சுமி பிரபலம் - குடும்பத்துடன் இணைந்து கோலாகலம்!!
கணவரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பாக்கியலட்சுமி பிரபலம் - குடும்பத்துடன் இணைந்து கோலாகலம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முன்னாள் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர் தனது கணவரின் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோ வெளியாகியுள்ளது.

வைரல் போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில், ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிபர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. 2வது முறையாக இவர் கர்ப்பமாக இருந்ததால், இந்த சீரியலை விட்டு அதிரடியாக விலகினார். தற்போது, இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஜெனிபருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, தன் குழந்தை புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.

தற்போது, ஜெனிபர் தனது கணவர் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது, இவர் 2வது மகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கடந்த ஆண்டு பிறந்த உங்க பையனா இது? அதுக்குள்ள இவ்ளோ வளர்ந்துட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது, நடிகை ஜெனிபரின் 2வது மகன் போட்டோ பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here