வசமாக சிக்கிக்கொண்ட இனியா.., வர்ஷினியால் எழிலை விட்டு விலகும் அமிர்தா.., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு!!

0
வசமாக சிக்கிக்கொண்ட இனியா.., வர்ஷினியால் எழிலை விட்டு விலகும் அமிர்தா.., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு!!
வசமாக சிக்கிக்கொண்ட இனியா.., வர்ஷினியால் எழிலை விட்டு விலகும் அமிர்தா.., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு!!

பாக்கியலட்சுமி சீரியலில், எழில்-அமிர்தா காதலை பிரிக்க பல வேலைகளை வர்ஷினி பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஸ்கூலில் இனியாவின் தோழி செல்போன் கொண்டு வர, அவர் வாங்க நாம எல்லாரும் போட்டோ எடுத்துப்போம் என்று சொல்கிறார். அதற்கு இனியா ஸ்கூலுக்கு போன் கொண்டு வர கூடாது என்று சொல்கிறார். இருப்பினும் அனைவரும் செல்பி எடுத்து கொள்கின்றனர். அந்த சமயம் டீச்சர் வர போன் இனியா கையில் இருந்தது, இதையடுத்து பிரின்சிபல் அனைவரையும் அழைத்து திட்டுகிறார், நாளை உங்கள் பேரன்ஸை அழைத்து வர வேண்டும் இல்லனா வராதீங்க என கூறுகிறார். இதை கேட்டு இனியா ஷாக் ஆகி விட்டார்.

மறுபுறம் எழில் ஆபிஸில் இருக்கும் போது வர்ஷினி வர, நேத்து நான் உங்க வீட்டுக்கு போயிருந்தேன் என்று சொல்ல , அதற்கு எழில் நான் இல்லாத சமயத்தில ஏன் போறீங்க என்று சத்தம் போடுகிறார். அதற்கு வர்ஷினி உங்க குடும்பத்துல உள்ளவங்க எல்லாருக்கும் என்ன ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்கிறார். இதையடுத்து எழில், அமிர்தா கூட அடிக்கடி போக மாட்டாங்க, நீங்க எதுக்கு போறீங்க என கேட்க அவங்க போகலைன்னா என்ன நான் போவேன் எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு, நான் சொல்றதை நீங்க கேட்கவே மாட்டேங்கிறீங்க ஆனா உங்க வீட்ல புரிஞ்சிக்க வைப்பேன் என்று வர்ஷினி சொல்கிறார். இதை கேட்டு எழில் பயங்கர ஷாக் ஆகிவிட்டர்.

ஒரே டெஸ்ட் தான்.., டிஆர்பி ரேட் எகிறிடுச்சு.., கடைசில கோபிக்கே இப்படி ஆப்பு வச்சுடீங்களே!!

இன்னொரு பக்கம் கோபி, பழங்கள், ஸ்வீட்டுகள் எல்லாம் வாங்கி கொண்டு செழியனுக்காக காத்து கொண்டு இருந்தார். அப்போது அவர் வர, இதையெல்லாம் ஜெனியிடம் கொடு, அவள நல்லா பாத்துக்கோ முதல் முறை கர்ப்பம் கலைந்ததால் ரொம்ப கேர் எடுத்துக்கணும் என்று அறிவுரைகளை வழங்குகிறார். மறுபக்கம் வர்ஷினி சொன்னதை நினைத்து அமிர்தா வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது, எழில் போன் செய்ய கொஞ்சம் தயக்கத்துடன் அமிர்தா பேசுகிறார். என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா பேசுறீங்க என எழில் கேட்டுக் கொண்டிருக்கும் போது அமிர்தா அப்பா, அம்மா போனை கட் செய்ய சொல்கின்றனர்.

எழில் வீட்டிலிருந்து வந்து உங்க கல்யாணம் பத்தி பேசட்டும் அதுவரைக்கும் எழிலிடம் இருந்து கொஞ்சம் விலகி இரு என்று சொல்லவிட்டனர். இன்னொரு பக்கம் இனியா ஸ்கூல் விட்டு வரும்போது ரொம்ப டல்லாக வர என்னாச்சு என்று பாக்கியா ஈஸ்வரி கேட்கின்றனர். நாளைக்கு உங்கள ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர சொல்லிருக்காங்கனு சொல்கிறார் இனியா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here