ராதிகாவை படாதபாடு படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த குடும்பம்? – அடி மேல் அடி வாங்கும் பாக்கியா!

0
ராதிகாவை படாதபாடு படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த குடும்பம்? - அடி மேல் அடி வாங்கும் பாக்கியா!

பாக்கியா,கோபிக்கு விட்ட சபதத்தை முடிப்பாங்களா? இல்ல இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவாங்களா அப்படிங்குற கேள்வியோட கடந்த வார எபிசோடு முடிஞ்சிது. இப்படி இருக்கப்போ இந்த வாரம் தொடங்கிய எபிசோடுல கோபி விசுவாசம் பட அஜித் போல தேவையை தேவையான நேரத்துல செய்ற மாதிரி ஸ்கூல் பீஸ்ஸை கட்டிட்டாரு. இதுனால படாதா பாடு பட்டு காசை புரட்டி மகளுக்கு பீஸ் கட்ட வந்த பாக்கியாவுக்கு மிஞ்சியது அசிங்கம் மட்டுமே.

இது பத்தாதுன்னு இத சாக்கா வச்சு கோபி, பாக்கியாவை கேக்க கூடாத கேள்வியெல்லாம் போன் பண்ணி கேட்டு அசிங்கப்படுத்தினார். அதோட தொடர்ச்சியா இன்னிக்கு எபிசோடுலயும் பாக்கியாவிடம் இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டியாச்சா? என ஈஸ்வரி கேட்க, என் டாடி எனக்கு கட்டிட்டாங்கன்னு சொல்லி பாக்கியா சொல்வதுக்குள் இனியா முந்தி கொள்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சும்மாவே ஈஸ்வரிக்கு பெத்த புள்ள பாசம் ஜாஸ்தி இதுல இந்த விஷயம் தெரியவும் ஒரே பெருமை தான். இந்த பக்கம் வெளியில இருந்து வீட்டுக்கு வந்து ராதிகா கோபியை சந்தித்த விஷயத்தை அவங்க அம்மா, அண்ணனிடம் சொல்ல ஆரம்பிக்கிறார். அப்போ கோபி பேசினது பத்தியும், அவரு என்னை நினைச்சு இப்படி குடும்பத்தை விட்டு வெளியே வந்து கஷ்டப்படறத பத்தியும் சொல்கிறார்.

இதெல்லாம் கேட்ட ராதிகாவின் அம்மா இப்படி ஒரு மனுஷன நீ ஏன் கஷ்டப்படுத்துற, புரிஞ்சிகிட்டு ஏத்துக்கிட்டா அவருக்கு ஆதரவா நீ இருக்கலாம்ல என சொல்ல, உடனே ராதிகா எனக்கு அவரு மேல இருக்குறது பரிதாபம் மட்டும் தான். நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்லனு சொல்லி சட்டுன்னு அங்கிருந்து கிளம்புகிறார். இதெல்லாம் பாக்குறப்போ எப்படியும் இவங்க குடும்பமே ராதிகாவை சம்மதிக்க வச்சு கூடிய சீக்கிரம் கோபியுடன் கட்டி வச்சிருவாங்க போல. மறுபுறம் பாக்கியாவின் நிலைத்தான் கேள்விக்குறியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here