இந்து முறைப்படி பாவனி கழுத்தில் தாலி கட்டிய அமீர் – கோலாகலமாக நடந்து முடிந்த திருமண சடங்குகள்!!

0

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய அமீர் பாவனி ஜோடி, பிபி ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த ஷோவில் வைத்து அமீர் பாவனிக்கு தாலி காட்டியுள்ளார்.

வைரல் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியில், அமீர் எவ்வளவோ முறை பாவனிக்கு  லவ் ப்ரொபோஸ் செய்தும்  அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து இருவரும், தற்போது பிபி ஜோடிகள் என்ற  நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிகழ்ச்சியில், வார வாரம்  நடந்து வரும் சுற்றுகளில் சிறப்பாக ஆடிய ஜோடிகள், தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், வைத்தும் பாவனிக்கு, அமீர் பலமுறை ப்ரொபோஸ் செய்தார்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஆகா கல்யாணம் என்ற சுற்று நடந்துள்ளது. இந்த சுற்றில் அமீர் பாவனிக்கு தாலி கட்டி திருமண சடங்குகள் செய்யும் வீடியோ ப்ரோமோவாக வெளியாகி உள்ளது. இந்த சம்பவம், நிகழ்ச்சிக்காக என்றாலும்  இது நடந்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here