38 வயதில் திருமண வாழ்க்கையில் நுழையும் விஜய் டிவி நடிகை – மாப்பிள்ளை யாரு தெரியுமா??

0

விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் முக்கிய சீரியலில் நடித்து பிரபலமான முக்கிய நடிகைக்கு தற்போது 38 வயதில் திருமணம் நடக்க இருக்கிறது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி நடிகை

விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு சீரியல்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது வரை விஜய் டிவியில் பேவரைட் நிகழ்ச்சி என்று கேட்டால் கனாக்காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, 3 ரோசஸ் போன்ற ஒரு பெரிய லிஸ்டை சொல்லிக்கொண்டே சொல்லலாம்.

அதிலும் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ப்ரஜின் மற்றும் சந்திரா ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இந்த சீரியலில் நாயகியாக நடித்த சந்திரா ஒரு மலையாள நடிகை ஆவார். இவர் ஏற்கனவே 2 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அதன் பிறகு சன் டிவியில் பல ஹிட் சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். நீண்ட காலமாக இடைவெளி விட்டிருந்த சந்திரா சன் டிவியில் பாசமலர் என்ற சீரியலில் நடித்தார். ஆனால் அதன் பிறகு தற்போது மலையாளத்தில் முக்கிய சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்பொழுது அதில் நடிக்க இருக்கும் நடிகருடன் காதல் ஏற்பட இரு வீட்டு சம்மதத்துடன் நிச்சயம் நடந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here