தளபதி 67 படத்தில் வில்லனாகும் தனுஷ்? இந்த காம்போ மட்டும் வேண்டாம்! லோகேஷிடம் கதறும் ரசிகர்கள்!!

0
தளபதி 67 படத்தில் வில்லனாகும் தனுஷ்? இந்த காம்போ மட்டும் வேண்டாம்! லோகேஷிடம் கதறும் ரசிகர்கள்!!

இளைய தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில், அவருக்கு வில்லனாக தனுஷை நடிக்க வைக்க, லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மிரட்டல் அப்டேட்  :

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் பிறந்த நாளில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிப்பார் என்றும், இந்த படத்தில் நடிகர் தனுஷை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அதிகம் ஸ்கோர் செய்தார். இதனால் இந்தப் படத்திலும், தனுஷை நடிக்க வைத்தால் விஜய் டம்மி ஆகி தனுஷ் பெயர் வாங்கி விடுவாரோ என பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், லோகேஷ் பட ராசி படி அவரது படத்தில் வில்லன்கள் மட்டுமே ஸ்கோர் செய்வார்கள் என்பதால், தளபதி 67 குறித்த கவலையில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தயவு செய்து இந்த காம்போ மட்டும் வேண்டாம் என கெஞ்சி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here