தளபதி 67ல் விஜய்யுடன் மோதும் சர்ச்சை நடிகர்.,, இனிமேல் தான் தரமான சம்பவமே இருக்கு!!

0
தளபதி 67ல் விஜய்யுடன் மோதும் சர்ச்சை நடிகர்.,, இனிமேல் தான் தரமான சம்பவமே இருக்கு!!
தளபதி 67ல் விஜய்யுடன் மோதும் சர்ச்சை நடிகர்.,, இனிமேல் தான் தரமான சம்பவமே இருக்கு!!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67” படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர். இந்நிலையில் தளபதி 67 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.

இணையும் பிரபல நடிகர்:

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி-லோகேஷ் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தப் படத்தில் த்ரிஷா, சமந்தா என இரு ஹீரோயின்கள் நடிக்கவிருப்பதாக நியூஸ் கசிந்து வருகிறது. இந்த வகையில் தற்போது இந்தப் படத்தில் வில்லனாக அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த வரிசையில், மற்றொரு மாஸ் ஹீரோ ஒருவர் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். அண்மையில் அவருடைய வெந்து தணிந்தது காடு படம் பெரும் வெற்றியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை திரைக்கு கொண்டு வந்த இயக்குனர்.. மணிரத்தினத்திற்கு கிடைத்த வெகுமதி!!

அதாவது, தளபதி 67 படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன்.T.R நடிக்க போவதாக தகவல் பரவி வருகிறது. மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன், சிம்புவை தன் மூவியில் நடிக்க வைக்க போவதாக கூறினார், இதையடுத்து வேட்டையாடு விளையாடு 2 திரைப்படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பார் என்ற தகவலும் வைரலானது. எனவே இரண்டு முன்னணி நட்சத்திரங்களுடன் நடிகர் சிம்பு இணைந்து நடிக்க போவதாக, வைரலாகி உள்ள தகவலை கேட்டு சிம்பு ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here