விஜய் டிவி மேடையில் கண் கலங்கிய பிரபலங்கள் – வைரலாகும் ப்ரோமோ!!

0
pv

விஜய் டிவி நட்சத்திரங்களுக்கு விஜய் தொலைக்காட்சி விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளுக்கு முன்னோட்டமாக விஜய் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சி விருதுகள்

விஜய் தொலைக்காட்சி என்றாலே பிரமாண்டம் தான். தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவிக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவி தான் கிளாஸ். அப்படிப்பட்ட ஒரு தொலைக்காட்சியில், விருது வழங்கும் விழா என்றால் அதன் பிரமாண்டத்தை சொல்லவா வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் விஜய் டிவி நட்சத்திரங்களுக்காக விருது வழங்கும் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நடைபெற உள்ளது. 7ஆவது ஆண்டாக ஒளிபரப்பாக உள்ள விஜய் டெலிவிஷன் விருதுகளுக்காக விஜய் நட்சத்திரங்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அஷ்வின் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் ‘குட்டி பட்டாஸ்’ – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்த விருது நிகழ்ச்சியை காண மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் விஜய் டெலிவிஷன் விருதுகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பின் கீழ் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் படி இந்த வாரம் ‘எங்க ஏரியா உள்ள வராத’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஈரமான ரோஜாவே, வேலைக்காரன், பாவம் கணேசன் போன்ற சீரியலின் நடிகர், நடிகைகள் பங்குபெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்களுக்கு சுவாரஸ்யமான பல போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் பாவம் கணேசன் தொடரில் நடித்து வரும் கலக்கபோவது யாரு பிரபலம் நவீன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காண்போரின் கண்களை குளமாக்குகின்றன. கலக்கலான பல போட்டிகளை கொண்ட இந்த நிகழ்ச்சியை மகேஷ் தொகுத்து வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here