விஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

விஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து பலரும் கண்கலங்கியுள்ளனர்.

விஜய் டெலிவிஷன் அவார்ட்

விஜய் டிவி வருடா வருடம் சின்னத்திரை நடிகர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த வருடமும் கொரோனாவிற்கு மத்தியில் 6 வது விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த ஹீரோ, ஹீரோயின் விருதை பாரதியும், கண்ணம்மாவும் தட்டி சென்றனர். மேலும் விஜய் டிவி பல விருதுகளை அளித்தது கவுரவித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குக் வித் கோமாளி சிறந்த நிகழ்ச்சிக்கான விருதை தட்டி சென்றது. சிறந்த மருமகள் விருதை ஆலியா மனசா பெற்றார். சிறந்த மாமியார் விருதை பாரதி கண்ணம்மா சௌந்தர்யா தட்டி சென்றார். போன வருடத்தில் யார் யாருக்கு அவார்ட் கிடைக்கவில்லையோ இந்த வருடம் தனது நடிப்பு திறனால் அங்கீகாரத்தை பெற்றுள்ளனர்.

ஆனால் சிறந்த நடிகைக்கான விருதை கட்டாயம் பெற வேண்டியது என்னவோ சித்ரா தான். ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை கொண்டதே அவர் தான். ஆனால் தற்போது சித்ரா இல்லை என்பதே மிகப்பெரிய சோகம்.  சித்ராவிற்கு இந்த அவார்ட் வாங்க வேண்டும் என்பது தான் நீண்ட நாள் ஆசையாம்.

லாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா?? வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்!!

ஆனால் அவர் உயிரோடு இல்லை என்பதை தற்போது வரை நம்ப முடியவில்லை என்று கூறி ரசிகர்கள் கண்ணீர் விட்டுள்ளனர். ஆனால் விஜய் டிவி சித்ராவிற்கு ‘மக்களின் நாயகி’ என்ற விருதை கொடுத்து சிறப்பித்துள்ளது. சித்ரா மறைந்தாலும் அவரது எண்ணங்களும், நினைவும் ரசிகர்கள் மனதில் எப்பொழுதுமே நிலைத்திருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here