முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விஜய் சேதுபதி நீக்கம் – அவருக்கு பதில் யார் நடிக்கிறார் தெரியுமா??

0

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து எடுக்க திட்டமிட்டனர். தற்போது விஜய் சேதுபதிக்கு பதிலாக தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதிக்கு பதிலாக தேவ் படேல்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டனர். இந்த திரைப்படத்தை 800 என்ற தலைப்பில் இயக்குனர் ரங்கசாமி என்பவர் இயக்க திட்டமிட்டார். 800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தநிலையில் இருந்தன.

பல எதிர்ப்புகள் தொடர்ந்து வந்தபடியால் இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்குவதை நிறுத்தி கொண்டார். ஆனாலும் இயக்குனருக்கு இந்த கதையை விட மனசு இல்லாமல் வேறொருவரை வைத்து கூட படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்தார். தற்போது 800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரிட்டனைச் சேர்ந்த தேவ் படேல்லை நடிக்கவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமான எந்த தகவலும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here