விஜய் சேதுபதி உடன் இணைந்த மற்றொரு பிக் பாஸ் பிரபலம்… ஒ இது தான் காரணமா???

0
பாலிவுட்டில் தனி இடம் பிடித்த விஜய் சேதுபதி - ஒரு படத்துக்கு இவ்ளோ சம்பளமா?வைரலாகும் பகீர் தகவல்!!

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பலர் மக்களுக்கு பரிச்சயமாகி உள்ளனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் சம்யுக்த்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதாவது  விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

விஜய் டிவியின் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் சம்யுக்தா. ஒரு மாடலாக இருந்த இவர் சன் டிவியின் சந்திரகுமாரி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். எனினும் அந்த சீரியல் மூலம் அவருக்கு எந்த வித பயனும் இல்லை.

அதன் பின்னர் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய மேடை தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில், வடிவழகி என்ற பிரிவின் அடிப்படையில் மக்களுக்கு பரிச்சியம் இல்லாத ஒரு நபராக  நுழைந்தார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு எல்லோரையும் போன்று  இவருக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இவர், சன் டிவியில் விநாயகர் சதுர்த்தி அன்று நேரடியாக டிவியில் வெளியாக உள்ள, விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த துக்ளக் தர்பார் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் போது விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here