தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோவில் விஜய் சேதுபதி – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

0

படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நேரத்திலும் விஜய் சேதுபதி தற்போது அரசின் விழிப்புணர்வு வீடியோவை டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய் சேதுபதி:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருந்த ”காத்து வாக்குல ரெண்டு காதல்”  திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் இவர் நடித்த மாமனிதன் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர், மும்பைக்கார், விக்ரம் ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமூக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில் “நாம் தற்போது பிளாஸ்டிக்கை உண்டு தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உண்ணும் ஒரு வார உணவில் ஒரு கட்டி அளவில் பிளாஸ்டிக் கலந்துள்ளது. பிளாஸ்டிக்கை ஒருபோதும் மக்க செய்ய முடியாது. ஆனால் இதற்கு ஒரு தீர்வு உண்டு. பிளாஸ்டிக்கை முற்றிலும் விட்டுவிட்டு தாத்தா பாட்டி காலத்தில் பயன்படுத்திய மஞ்சள் பையை உபயோகிக்க வேண்டும். அப்பொழுது தான் பிளாஸ்டிக்கிலுருந்து நம்மை காத்து கொள்ள முடியும்” இவ்வாறு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here