
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜய் சேதுபதி தான். வில்லனாக கேரியரை தொடங்கி அதன் பின்னர் ஹீரோவாக நடித்து தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படத்திற்காக அவர் 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹீரோ, வில்லன், குணசித்திர என பன்முக நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு 140 கோடி என்று சொல்லப்படுகிறது.