‘கண்மணியா.. கதீஜாவா.. இரண்டு லட்டு தின்னும் விஜய் சேதுபதி’ – காத்து வாக்குல ரெண்டு காதல் திரை விமர்சனம்!

0
'கண்மணியா.. கதீஜாவா.. இரண்டு லட்டு தின்னும் விஜய் சேதுபதி' - காத்து வாக்குல ரெண்டு காதல் திரை விமர்சனம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாததால் எதையுமே அனுபவிக்காமல் இருக்கும் ஒருவனது வாழ்வில் தேவதைகளாக வரும் இரண்டு பெண்களின் மீது ஒரே சமயத்தில் காதல் வருகிறது. இந்த காதலின் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லும் கதை தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

காத்து வாக்குல ரெண்டு காதல்:

ஹீரோ ரெம்போ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், அவர் காதலிக்கும் கண்மணியாக நயன்தாராவும், கதிஜாவாகவும் சமந்தாவும் நடித்துள்ளனர். படத்தின் கான்செப்ட் புதுமையாக இருப்பதாகவும், செம்ம ஜாலியாக படத்தை கொண்டு சென்றதற்காகவும் இயக்குனரை கட்டாயம் பாராட்டியாக வேண்டும்.

காலையில் கால் டாக்ஸி டிரைவராகவும் இரவில் பார் ஒன்றில் ஜிம் பாயாகவும் பணியாற்றி வருகிறார் விஜய்சேதுபதி, அப்பொழுது இவருக்கு கண்மணி, கதிஜா மீது ஒரே நேரத்தில் காதல் வருகிறது. அவர்களும் ஊரில் வேறு ஆண்களே இல்லாதது போன்று ரெம்போவை விழுந்து விழுந்து காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி ரெண்டு பேரையும் காதலிக்கிறேன்., கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் போது கண்மணி, கதிஜா என்ன முடிவை எடுக்கின்றனர் என்பது தான் இந்த படத்தின் மீதி கதை.

விஜய் சேதுபதி, நயன்தாரா நன்றாக நடித்து இருந்தாலும், சமந்தா அனைவரையும் ஓவர்டேக் செய்து படத்தை தூக்கி நிறுத்துகிறார். நானும் ரவுடி தான் படத்தின் விஜய் சேதுபதி, நயன்தாராவை திரையில் மிஸ் செய்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். புது கான்செப்ட்டுக்காக ஒரு முறை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை ஜாலியாக பார்க்கலாம்..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here