விஜய் சேதுபதியின் அடுத்த படம்… இவர்தான் இயக்குனரா?? அப்போ செம கலக்கல் தான்!!!

0

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தன் திறமையால்  இப்போது முன்னணி ஹீரோவாக உள்ளவர் தான்  விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் புது படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் நமது மக்கள் செல்வன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய் சேதுபதி, தற்போது வரை ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து உள்ளார். மேலும் ஹீரோவாக  மட்டும் இல்லாமல் அனைத்து கதாப்பாத்திரங்களையும்  ஏற்று தனது பன்முக திறமைகளை வெளிப்படுத்தி  வருகிறார். சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து இருந்தார். அப்படம் அவருக்கு நல்ல  வரவேற்பை தேடித்தந்தது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும்  கார்த்திக் சுப்பராஜின் மாஸ் கூட்டணி இணையும் ஐந்தாவது திரைப்படம் இதுவாகும். மேலும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here