விஜய் சேதுபதி படத்தில் சிம்பு – மரண மாஸாக வெளியான ‘முருகா’ பாடல்!!

0
வில்லன்னாலே விஜய் சேதுபதி தான்., மாஸ் ஹீரோ படத்தில் புதிய அவதாரம் - வைரலாகும் லேட்டஸ்ட்  அப்டேட்!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

முருகா பாடல் ரிலீஸ்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 45ஆவது திரைப்படமாக உருவாகியுள்ளது ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம். தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ட்ரெண்டில் இருந்து வரும் சென்சேஷனல் ஹீரோ என்றால் அது விஜய் சேதுபதி தான். தனது நேச்சுரலான எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை தன் பக்கமாக ஈர்த்து வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சினிமாவில் இந்த இடத்தை அடைவதற்கு அவர் தாண்டி வந்த தடைகளும், போராட்டங்களும் பல. தன்னைப்போல வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு ஊக்க சக்தியாக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். அதே சமயத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாது வித்தியாசமான வில்லன் வேடங்களையும் ஏற்று அதை சிறப்பாக செய்து வருகிறார் இவர்.

மாத்தி மாத்தி குறைய மட்டும் சொல்லி வரும் திமுக மற்றும் அதிமுக – குழப்பத்தில் தமிழகம்!!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ‘லாபம்’ திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் 46ஆவது படத்திற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற திரைப்படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ‘முருகா’ எனத்துவங்கும் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.  தற்போது அந்த பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here