விஜய் சேதுபதி படத்தை தட்டிப்பறித்த வாரிசு நடிகர்… என்ன சோனமுத்தா போச்சா!!!

0

சிறு சிறு வேடங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகராக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலா குமாரா என்ற படத்தின் இரண்டாம் பாகமான கொரோனா குமார் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தன் மூலம் திரைக்கு வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பீட்சா படத்தின் மூலம் தன்னை ஒரு கதாநாயகனாக முன்னிலைப்படுத்தி கொண்டார். அதை தொடர்ந்து அவர் அடுத்து அடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் ஹீரோவாக மட்டுமில்லாமல் அனைத்து குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல குறும் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் மற்றும் நடிகை நந்திதா இணைந்து நடித்து வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலா குமாரா படம் நல்ல வெற்றியை பெற்றது. மேலும் பெரும் வசூல் சாதனையை படைத்தது. அதில் இவர்களை தவிர பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கோகுல்  உருவாக திட்டமிட்டு உள்ளார்.

இதில் முதலில் விஜய் சேதுபதி கமிட்டாகி இருந்த நிலையில் அவர் பல படங்களில் பிசியாக இருப்பதால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த படம் ஒரு காமெடி படம் என்பதால் இதில் சந்தானம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில்  தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது லிட்டில் சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க  உள்ளதாகவும்,அதில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் வர உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளன. எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here