அடுத்தடுத்து விஜய் சேதுபதிக்கு லாட்டரி – ரசிகர்களுக்கு “டபுள்” ட்ரீட்!!

0

நடிகர் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று ஒரு படத்தின் பிரஸ்ட் லுக், மற்றோன்று அவரது வேறு திரைப்பதின் ரிலீஸ் தேதி ஆகும். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால், அறிமுகமான சில வருடங்களிலேயே இவர் 40 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து விட்டார். இவரது சிறப்பே ஹீரோவாக மட்டும் நடிக்காமல் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிப்பது தான்.

நீங்க அப்பவே அப்படியா?? ராஷ்மிகாவின் கியூட்டான குழந்தை புகைப்படம்!!

குறிப்பாக, இவரது வில்லத்தனத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படியாக இருக்க, இவரது வசம் தற்போது நான்கிற்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அதில் இரண்டு தான் “லாபம்’ மற்றும் “மும்பைக்கார்” என்ற திரைப்படம். இதில் “லாபம்” திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் எஸ்பி ஜெகன்நாதன் சமீபத்தில் உடல் நல குறைவினால் மரணம் அடைந்து விட்டார்.

இதனை அடுத்து அந்த திரைப்படம் குறித்த தகவலினை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதியின் விஎஸ்பி புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாநகரம்” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அந்த படம் “மும்பைக்கார்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்த திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here