கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் வழங்கினார் விஜய்சேதுபதி…

0
பாலிவுட்டில் தனி இடம் பிடித்த விஜய் சேதுபதி - ஒரு படத்துக்கு இவ்ளோ சம்பளமா?வைரலாகும் பகீர் தகவல்!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
இந்தியாவை மொத்தமாகத் திருப்பிப்போட்டு உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் அரசு மட்டுமல்லாமல்  சினிமா, அரசியல் பிரமுகர்களும் அதிகளவிலான உதவிகளைச் மக்களுக்கு செய்துவருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் அனைத்து மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கும் படி ஒரு கோரிக்கை விடுத்தார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதிக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி பின்னர் நடிகர் அஜித் ஆகியோர் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியுதவியை வழங்கியுள்ளனர். இது தவிர பல்வேறு நிறுவனங்களும் தங்களால் முடித்த நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் வழங்கியுள்ளார். அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவித்த வண்ணம் உள்ளது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here