விஜய்யின் அடுத்த படம் குறித்து வெளிவந்த சுவாரசிய தகவல்.. குஷியில் தளபதி ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் விஜய்யும் ஒருவர். கடைசியாக விஜய் நடித்து வெளிவந்த படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். பின்னர் மிரட்டலான பீஸ்ட் பட அப்டேட் வெளிவந்தது.

‘பீஸ்ட்’ விஜய்யின் 65வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தும் மற்றொரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. விஜய் அவர்களின் அடுத்த படம் பற்றிய தகவல் தான் அது. அதாவது தளபதியின் அடுத்த படத்தை முன்னணி இயக்குநரான வம்சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வம்சியின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த பிரபல பாடகர் கிரிஷ் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் வம்சி என பேச்சுக்கள் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here