விஜய்யின் அடுத்த படம் தெலுங்கில்…அதிர்ச்சியில் திரையுலகினர்!!!

0

தமிழ் திரையில் மிக முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய்.தற்போது அவரது 65 வது படத்தை  நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 66 வது படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கப் போவதாகவும், வம்சி பைடிப்பள்ளி என்னும் தெலுங்கு இயக்குனர் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களில் பெரும்பாலானவை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களாகும். மேலும் விஜய் தனது படங்களை மற்ற மொழி தயாரிப்பாளர்கள் தயாரிக்க வாய்ப்பு தருவதில்லை. இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு அந்த வாய்ப்பு  தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜுக்கு கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அணுகி கொண்டிருக்கும் தமிழ் தயாரிப்பாளர்களிடையில் இந்த செய்தி அதிர்ச்சி மற்றும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய்யின் முந்தைய படங்களான பிகில்,மாஸ்டர் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட போது நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தெலுங்கு திரையிலும் தனது ரசிகர்கள் மனதிலும் கோலூன்றி நிலைக்கவே, வேறு மொழி படங்களில் நடிக்க கூடாது என்ற கொள்கையில் இருந்த நடிகர் விஜய் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு உள்ளார் என திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here