விஜய் பட பாடலாசிரியர் மகள் தற்கொலை – பெற்றோரின் செயலால் விபரீதம்! போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!!

0
விஜய் பட பாடலாசிரியர் மகள் தற்கொலை - பெற்றோரின் செயலால் விபரீதம்! போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!!

கோலிவுட்டின் முன்னணி பாடலாசிரியர் கபிலனின் 28 வயது மகள் தூரிகை, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அவரது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை:

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தில் “உன் சமையலறையில்” என்ற பாடலின் பாடலாசிரியராக அறிமுகமாகி, தனக்கான தனி இடத்தை பிடித்தவர் கபிலன். இதனைத் தொடர்ந்து, விஜய் படத்தின் அர்ஜுனரு வில்லு, ஆல்தோட்ட பூபதி உள்ளிட்ட பல பாடல்களின் பாடல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு தூரிகை என்ற 28 வயது மகள் உள்ளார். காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் எழுத்தாளர் உள்ளிட்ட பன்முக திறமையுடன்  துணிச்சல் மிக்க பெண்ணாக வலம் வந்த தூரிகை நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கான முக்கிய காரணம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது, பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரது பெற்றோரிடம் பல கோணங்களில்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here