விஜய்யின் பீஸ்ட்டில் மாஸ்டர் படத்தின் சாயலா? – ரகசியத்தை அம்பலப்படுத்திய ரீசன்ட் போட்டோ!!

0

விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் 100வது நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் அண்மையில் வெளியாகி அது குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை:

நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இதன் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் நூறாவது நாள் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இயக்குனர் நெல்சன் அவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டது.

மிகப் பெரிய அளவில் ரீச் ஆன இந்த புகைப்படத்தில் உள்ள ஒரு முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் விஜயின் காலுக்குக் கீழே, இரண்டு பீர் பாட்டில்கள் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில், விஜய்யின்,மிக்ஸியில் சரக்கு கலக்கும் காம்போ பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த புகைப்படத்திலும் இவ்வாறு இருப்பது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here