
லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 68 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். முதற் கட்ட பணிகளில் அமெரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்னர் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் ஹார்ட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை அறிந்த நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு திரும்பிய உடன், தந்தையிடம் சென்று நலம் விசாரித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை என்று சிலர் கூறி வந்த நிலையில் அந்த ரூமரை உடைக்கும் விதமாக விஜய் நடந்து கொண்ட சம்பவம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.