பழசு எதையும் மறக்காத தளபதி விஜய் – நெருங்கிய நண்பர்களுடன் திடீர் சந்திப்பு!!

0
விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
டாப் பணக்காரர் அம்பானியுடன் டீல் பேசிய தளபதி விஜய் - கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள்!!

நடிகர் விஜய் தன்னுடன் லயோலா கல்லூரியில் படித்த, தனது முன்னாள் நண்பர்களை அண்மையில் சந்தித்துள்ளார்.  இனி ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது, நாம் சந்தித்து கொள்ள வேண்டும் என அவர் கூறியதாக இணையத்தில் தகவல் கிடைத்துள்ளது.

மாஸ் காட்டும் விஜய்:

நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், பீஸ்ட் என்ற படத்தை முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் தனது லயோலா கல்லூரி  நண்பர்களை நேற்று சந்தித்துள்ளார். அப்போது நண்பர்கள் பீஸ்ட் படம் பற்றி விஜய்யிடம் கேட்டுள்ளனர். அதற்கு படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என விஜய் கூறியுள்ளார். மேலும், நாம் அனைவரும் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பா மீட் பண்ண வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

நான் எப்போதும் உங்களை பார்க்க ரெடியாக தான் இருக்கிறேன் நீங்கள் தான், வேலை இருக்கிறது என்று சொல்லி தவிர்த்து வருகிறீர்கள் என்று மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் தனது நண்பர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியும் செய்து வருகிறார். இதை வெளியே சொல்லக் கூடாது என அவர் கூறியுள்ளதால், இதுவரை விஷயம் வெளியே வரவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போது, நடிகர் விஜய்யின் நண்பர்களுடனான இந்த திடீர் சந்திப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here