மாஸ்டர் திரைப்பட பொங்கல் ரிலீஸ் – முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!!

0

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை காண்பதற்காக தியேட்டரில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கும் விவகாரமாக தமிழக முதல்வருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார் தளபதி விஜய்.

மாஸ்டர்:

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது படம் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். தற்போது அவர் வருடத்திற்கு 1 படங்ககள் மட்டுமே நடித்து வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் அவரது படத்தை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்து வருகின்றனர். தற்போது அவர் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் கடந்த ஜூன் மாதமே வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதனை போக்கும் வகையில் படத்தின் இயக்குனர், மாஸ்டர் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளிவரும் என்று கூறினார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கலள் வெளியாகி அனைவரிடமும் சிறப்பான வரவேற்பை பெற்றது.மேலும் மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளார்கள். தற்போது தியேட்டரில் 50 சதவீதம் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக தளபதி விஜய் திடிரென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். மேலும் அவர் தியேட்டர் பார்வையாளர்களின் அனுமதியை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here