தளபதியுடன் மீண்டும் இணைந்த மாஸ்டர் பட இயக்குனர் – ஓ இதற்காக தான் இந்த கூட்டணியா??

0

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக எழுந்த அறிவிப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மீண்டும் இணையும் கூட்டணி:

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். இந்தப் படம் கொரானா பரவலால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்க தளர்வை அடுத்து திரையரங்கத்தில் வெளியாகியது.  வெளியான நாள் முதலே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் எடுக்கப்பட்டு நீண்ட நாள் கழித்து ரிலீஸ் ஆனதால் இதன் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக விஜய் வாக்களித்திருந்தார்.  இது பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியே வராமல் இருந்தது.  இந்த நிலையில்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் குமார் தயாரிப்பில் தளபதி நடிப்பில் படம் உருவாவது  உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here