சினிமாவுக்கு எண்டு கார்டு போட்ட விஜய்.., முழுமூச்சாக அரசியலில் குதிக்க பக்காவா பிளான் போட்ட தளபதி!!

0
சினிமாவுக்கு எண்டு கார்டு போட்ட விஜய்.., முழுமூச்சாக அரசியலில் குதிக்க பக்காவா பிளான் போட்ட தளபதி!!
சினிமாவுக்கு எண்டு கார்டு போட்ட விஜய்.., முழுமூச்சாக அரசியலில் குதிக்க பக்காவா பிளான் போட்ட தளபதி!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த போது பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதையெல்லாம் வெற்றிக்கு அடிக்கல் நாட்டி தற்போது எந்த நடிகரும் தொட முடியாத அளவுக்கு உயர்ந்திருப்பவர் தான் தளபதி விஜய். தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற செய்தி வைரலாக பரவி வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கேற்ப அவரும் தனது மக்கள் இயக்கம் மூலமாக ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகிறார். நேற்று கூட இலவச மதிய உணவு என்ற பேரில் தமிழகத்தில் உள்ள 238 மாவட்டங்களில் உள்ள ஏழைகளுக்கு அன்னதானம் நடைபெற்றது. அதே போல் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாகவும், அதை விஜய்யே நேரில் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

ரயில் பயணிகளே., உங்களுக்கு இந்த சலுகையும் உண்டு.., முக்கிய அறிவிப்பு!!!

இந்நிலையில் விஜய்யின் அரசியல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தளபதி அவரின் 70 வது படத்தை முடித்தவுடன் முழுவதுமாக அரசியலில் குதிக்க போகிறாராம். அந்த படத்தை வெற்றிமாறன் இயக்க இருக்கிறாராம். அரசியல் சார்ந்த படமாக எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் களம் இறங்க உள்ளதாகவும், அதற்கு முன்னதாக மதுரையில் அரசியல் மாநாட்டை நடத்தவும் மெகா பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here