ஒரே போட்டியில் இத்தனை சாதனையா?? விஜய் ஹசாரே டிராபியில் அசத்தி வரும் தமிழ்நாடு அணி!!

0
ஒரே போட்டியில் இத்தனை சாதனையா?? விஜய் ஹசாரே டிராபியில் அசத்தி வரும் தமிழ்நாடு அணி!!
ஒரே போட்டியில் இத்தனை சாதனையா?? விஜய் ஹசாரே டிராபியில் அசத்தி வரும் தமிழ்நாடு அணி!!

விஜய் ஹசாரே டிராபியின் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

விஜய் ஹசாரே டிராபி:

இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி தொடர் விறுவிறுப்பாக 38 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த டிராபியில், தமிழ்நாடு அணி, அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக இன்று மோதியது. இதில், டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் நாராயண் ஜெகதீசன் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து தரமான அடித்தளத்தை கொடுத்திருந்தனர். இதில், சாய் சுதர்சன் 154 ரன்களில் வெளியேற, தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெகதீசன். இவர், 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்ஸர் உட்பட 277 ரன்கள் மழை போல குவித்துள்ளார். இதன் மூலம், விஜய் ஹசாரே டிராபி அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோஹ்லியை(4 சதம்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இவர், நடப்பு டிராபியில், 114*, 107, 168, 128, 277 என தொடர்ந்து 5 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா இடத்திலும் நீங்க தான்…, தோனியை புகழ்ந்து தள்ளிய விராட் கோஹ்லி!!

இன்றைய போட்டியில் தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்களை குவித்து எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், 2 சாதனைகளை தமிழ்நாடு படைத்துள்ளது. அதாவது, விஜய் ஹசாரே டிராபி 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை அடைத்துள்ளது. மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 498 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது, இந்த சாதனையையும் தமிழ்நாடு அணி முறியடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here