இறுதிப்போட்டியில் நுழைந்த மகாராஷ்டிரா…, முதல் முறையாக டிராபியை வென்று அசத்துமா??

0
இறுதிப்போட்டியில் நுழைந்த மகாராஷ்டிரா..., முதல் முறையாக டிராபியை வென்று அசத்துமா??
இறுதிப்போட்டியில் நுழைந்த மகாராஷ்டிரா..., முதல் முறையாக டிராபியை வென்று அசத்துமா??

விஜய் ஹசாரே டிராபியின் இறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக சௌராஷ்டிரா அணி மோத உள்ளது.

விஜய் ஹசாரே டிராபி:

இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 38 அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த டிராபியின் லீக் சுற்றுகள் முடிவில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மும்பை, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

பல சதங்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்…, உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா??

இதில், கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா மற்றும் அசாம் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்த அரையிறுதி சுற்றில், கர்நாடகா அணிக்கு எதிராக சௌராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதே போல, அசாம் மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், மகாராஷ்டிரா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த டிராபிக்கான இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் வரும் 2ம் தேதி மோத உள்ளன. இதில், மகாராஷ்டிரா அணி முதல் முறையாக டிராபியை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சௌராஷ்டிரா அணியானது இதற்கு முன் (2007-2008) ஒரு முறை மட்டும் இந்த டிராபியை வென்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here