அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் தமிழ்நாடு அணி…, மீண்டும் சாம்பியன் ஆகுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!!

0
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் தமிழ்நாடு அணி..., மீண்டும் சாம்பியன் ஆகுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!!
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் தமிழ்நாடு அணி..., மீண்டும் சாம்பியன் ஆகுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!!

இந்தியாவில் சையது முஷ்டாக் அலி டிராபியை தொடர்ந்து விஜய் ஹசாரே டிராபி வரும் 12ம் தேதி முதல் அதிரடியாக தொடங்க உள்ளது.

விஜய் ஹசாரே டிராபி:

இந்திய கிரிக்கெட் கவுன்சிலானது (பிசிசிஐ), இந்தியாவின் உள்ளூர் வீரர்களை அடையாளம் கண்டு சர்வதேச அளவில் தேர்ந்தெடுப்பதற்கான நோக்கில் பல உள்ளூர் டிராபிகளை நடத்தி வருகிறது. இந்த வகையில், சையது முஷ்டாக் அலி, ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு தொடர்களும் அடங்கும்.

10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா…, இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!!

இதில், சமீபத்தில் முடிந்த சையது முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதனை தொடர்ந்து, விஜய் ஹசாரே டிராபி வரும் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த டிராபியில், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட 38 அணிகள் 5 குரூப்களின் கீழ் 8 மற்றும் 7 அணிகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் போட்டி போட்டு கொள்ள உள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதுவரை 20 சீசன்களை கடந்துள்ள இந்த டிராபியில் தமிழ்நாடு அணி 7 முறை அரையிறுதி வரை முன்னேறி உள்ளது. இதில், 5 முறை சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிட்ட தக்கது. இந்த முறை தமிழ்நாடு அணி குரூப் C யில் கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, பீகார் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இதில், தமிழ்நாடு அணியானது, பீகார் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை வரும் 12ம் தேதி விளையாட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here