கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் தனது 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பும் அண்மையில் விறுவிறுப்பாக தொடங்கி இருந்தது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் தளபதி 68 படத்தின் அப்டேட்டை ”காஞ்சுரிங் கண்ணன்” என்ற படத்தின் டீசருக்கு இடையில் வைத்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் ”காஞ்சுரிங் கண்ணப்பன்” படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜயை பயன்படுத்துகிறார்கள் என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
yes you cannot use #ThalapathyVijay name to promote your product for being the production house of #Thalaoathy68. @VTLTeam
— ASH ZAIN (@ashkar_zain) November 17, 2023